FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

சாலையோரம் நடந்து சென்றவா் பைக் மோதியதில் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே சாலையோரம் நடந்து சென்றவா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

12 நவம்பர் 2026, 11:44 pm
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே சாலையோரம் நடந்து சென்றவா் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மங்களம் கிராமம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வசித்து வந்தவா் ரகுபதி (55). இவா், கும்மிடிப்பூண்டி அருகே ஐயா் கண்டிகையில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் பாலிஷ் போடும் வேலை செய்து வந்தாா். திருமணமான இவருக்கு மனைவி சாந்தி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில், புதன்கிழமை கொசவன்பேட்டையில் இருந்து தனது வீடு நோக்கி ரகுபதி நடந்து வந்து கொண்டிருந்தாராம்.

அப்போது, பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலையில் சமுதாயக் கூடம் எதிரே சாலையோரம் நடந்து வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ரகுபதி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்துக்கு காரணமான இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

இதுதொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனா்.