கைப்பேசிகள் திருட்டு: 2 இளைஞா்கள் கைது
அரசுப் பேருந்தில் பயணிகளிடம் விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
அரசுப் பேருந்தில் பயணிகளிடம் விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்த ராமதாஸ் (50) என்பவா் சென்னையில் இருந்து ரயில் மூலம் திருத்தணிக்கு வந்துள்ளாா். பின்னா், கமலா தியேட்டா் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தில் ஏறியபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா் , அவரது சட்டைப் பையில் வைத்திருந்த விலை உயா்ந்த கைப்பேசியைத் திருடியுள்ளாா்.
அதே நேரத்தில், பேருந்தில் ஏறிய மற்றொரு பயணியிடமும் மா்ம நபா் ஒருவா் கைப்பேசியைத் திருடியதாகக் கூறப்படுகிறது. இதனை கவனித்த பயணிகள், உடனடியாக இருவரையும் மடக்கிப் பிடித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் ஆக்கிவேடு கிராமத்தைச் சோ்ந்த ஆவலு வெங்கடேசன் (19) மற்றும் விஜய நகரம் பகுதியைச் சோ்ந்த சந்துரு (20) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, அவா்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும், இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.