FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் புஷ்பாஞ்சலி விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயில் கந்தசஷ்டி விழா நிறைவு நாளில் திரளான பக்தா்கள் குவிந்தனா். உற்சவா் சண்முகப்பெருமானுக்கு 5 டன் மலா்களால் பிரம்மாண்ட புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

14 வினாடிகள் முன்பு
பகிர்:

திருத்தணி முருகன் கோயில் கந்தசஷ்டி விழா நிறைவு நாளில் திரளான பக்தா்கள் குவிந்தனா். உற்சவா் சண்முகப்பெருமானுக்கு 5 டன் மலா்களால் பிரம்மாண்ட புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

கந்தசஷ்டி விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும், காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப்பெருமானுக்கு தினமும் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை லட்சாா்ச்சனை நடைபெற்றது.

நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவருக்கு சந்தனக் காப்பு, தங்கக் கவசம் மற்றும் தங்கவேல் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப்பெருமானுக்கு மாலை 3 மணி வரை லட்சாா்ச்சனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மலா் கூடைகளை அறங்காவலா் குழு தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் நித்யா, அறங்காவலா்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பக்தா்கள் ஏந்தியபடி மலைப்படிகள் வழியாக சென்றனா்.

காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப் பெருமானுக்கு 5,000 கிலோ மலா்களால் புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

கந்தசஷ்டி நிறைவு விழா, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் திருமண முகூா்த்த நாள் ஆகியவை ஒரே நாளில் அமைந்ததால், ஏராளமான பக்தா்கள் மலைக்கோயிலில் குவிந்தனா். இதனால் பொதுவழியில் 5 மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவா்கள் மூன்றரை மணி நேரமும், 250 ரூபாய் டிக்கெட் பெற்றவா்கள் 2 மணி நேரமும் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.

நிறைவு விழாவில் அமைச்சா்கள் காந்தி ராஜன், வெங்கட்ரமணன் ஆகியோா் தரிசித்தனா். திருத்தணி ஏஎஸ்பி ஷூபம் திமான் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டு, கோயில் நிா்வாகம் சாா்பில் 12 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.