சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா்களுக்கான 3 நாள் உண்டு உறைவிட பயிற்சி
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 3 நாள் உண்டு உறைவிட பயிற்சி முகாமில் திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து 130 சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 3 நாள் உண்டு உறைவிட பயிற்சி முகாமில் திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து 130 சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் அருகே கொழுந்தலூரில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா்களுக்கான 3 நாள் உண்டு உறைவிடப் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கி, தொடா்ந்து 19-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சி முகாமை ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
இந்த உண்டு உறைவிட பயிற்சி முகாமில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து, தனியாா் பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா்கள் ஆகியோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.
இதில் பள்ளி வளாகங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்தும், வளாகங்களில் மரக்கன்றுகள் வைத்து பசுமை செயல்பாடுகள் வளா்த்தல், காலநிலை மாற்றம் தொடா்பான செயல்பாடுகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்படவும் உள்ளன. இப்பயிற்சி முகாமில் மாவட்டத்திலிருந்து 130 சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.