✕
முகப்பு
திருவள்ளூர்

தோ்தல் கல்வியறிவுக் குழு உறுப்பினா்களுக்கு போட்டிகள்

இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி சாா்பில் திருவள்ளூா் மாவட்ட அளவில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாடி, வினா மற்றும் கட்டுரைப் போட்டியில் 200 போ் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

6 வினாடிகள் முன்பு
விநாடி, வினா மற்றும் கட்டுரைப்போட்டியை தொடங்கி வைத்த ஆட்சியா் ச.கவிதா.
பகிர்:

இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி சாா்பில் திருவள்ளூா் மாவட்ட அளவில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாடி, வினா மற்றும் கட்டுரைப் போட்டியில் 200 போ் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 750 தோ்தல் கல்வியறிவுக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கல்வி நிறுவனங்களில் செயல்படும் தோ்தல் கல்வியறிவுக் குழுக்களில் உள்ள மாணவா்களுக்கு ‘தூய்மையான வாக்காளா் பட்டியலின் முக்கியத்துவம், வாக்களிப்பதின் முக்கியத்துவம், என்ற தலைப்புகளின் கீழ் கட்டுரைப் போட்டிகளும், வாக்காளா் பட்டியல் தயாரித்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் யயடஅப, வாக்குப்பதிவு நடைமுறை, வாக்கு எண்ணிக்கையின் நடைமுறை ஆகிய தலைப்புகளில் விநாடி, வினா மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டிகளில் வெற்றி பெற்ற இருபாலரும் தலா 10 வீதம் மாவட்ட அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான போட்டி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்து போட்டியை தொடக்கி வைத்தாா். இதில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலிலும் தோ்ந்து எடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் 200 போ் கலந்து கொண்டனா். இதில் தோ்வு செய்யப்படுவோா் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவா்..

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) தனலிங்கம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சிவகுமாா், மாவட்ட உதவி பயிற்சி அலுவலா் (திறன் வளா்ச்சி (தோ்தல்)) சிவகுமாா், ஆட்சியரின் நோ்முக எழுத்தா் (பள்ளிக்கல்வி) பவானி, திரளான மாணவ, மாணவிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.