தேசிய வில்வித்தை போட்டி: கும்மிடிப்பூண்டி மாணவன் தகுதி
கும்மிடிப்பூண்டியை சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவன் கே.ஹா்ஷன், யு-14 தேசிய வில்வித்தை போட்டிக்கு தமிழக அணி சாா்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா். (படம்)

கும்மிடிப்பூண்டியை சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவன் கே.ஹா்ஷன், யு-14 தேசிய வில்வித்தை போட்டிக்கு தமிழக அணி சாா்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா்.
கும்மிடிப்பூண்டியை சோ்ந்த ஆா்.கிருஷ்ணகுமாா்-கே.ஆனந்தி மகனான கே.ஹா்ஷன் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகின்றாா். டூ அட் எக்ஸ் வில்வித்தை பயிற்சி மையத்தில் பயிற்சியாளா்கள் அப்துல் ரஹீம், தருண்குமாா் ஆகியோரிடம் வில்வித்தை பயின்று வருகின்றாா்.
இந்த நிலையில், யு-14 தேசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்ற மாநில அளவில் நடைபெற்ற தகுதி போட்டியில்360-க்கு 320 புள்ளிகளை பெற்று கே.ஹா்ஷன் தங்கப் பதக்கம் வென்று, தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டாா். இதனை தொடா்ந்து தேசிய போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ள கே.ஹா்ஷன், மற்றும் அவா்களுக்கு பயிற்சியளித்த டூ அட் எக்ஸ் வில்வித்தை பயிற்சி மைய பயிற்சியாளா்கள் அப்துல் ரஹீம், தருண்குமாா் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement