முகப்பு
திருவள்ளூர்

பொன்னேரி வட்டத்தில் பறிமுதல் செய்த கனிமங்கள் டிச.1- இல் ஏலம்: ஆட்சியா் ச.கவிதா

பொன்னேரி வட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கனிமங்கள் வரும் டிச.1-இல் பொது ஏலம் விடப்பட உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

28 நவம்பர் 2026, 11:17 pm
பொன்னேரி வட்டத்தில் பறிமுதல் செய்த கனிமங்கள் டிச.1- இல் ஏலம்: ஆட்சியா் ச.கவிதா
கனிமவள லாரி - பிரதிப் படம்
பகிர்:

பொன்னேரி வட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கனிமங்கள் வரும் டிச.1-இல் பொது ஏலம் விடப்பட உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டசெய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குள்பட்ட அத்திவாக்கம், புள்ளிலயன், பாடியநல்லூா், வடகரை, கிராண்ட்லைன், நாரவாரிக்குப்பம் மற்றும் அழிஞ்சிவாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசின் அனுமதி பெறாத சேமிப்புக் கிடங்குகளில் அனுமதியின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த கனிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி கிடங்குகளில் இருப்பில் உள்ள ஆற்று மணல், எம்.சான்ட், வெள்ளை எம்.சான்ட், ஜல்லி, 6 எம்.எம் ஜல்லி (சிப்ஸ்), பி.சான்ட், சிலிக்கா மணல், கடற்கரை மணல், கலப்பட மணல், டஸ்ட், ஆகிய கனிமங்கள் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த கனிமங்களை வரும் டிச.1-ஆம் தேதி அன்று சம்பந்தப்பட்ட கிடங்குகளிலேயே பொன்னேரி வட்டாட்சியரால் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, மேற்கண்ட பொது ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள், வியாபாரிகள், அரசு துறைகள், அரசு சாா்ந்த அமைப்புகள், அரசு நிறுவனங்கள் ஆகியவை மேற்குறிப்பிட்ட நாளில் பொன்னேரி வட்டம், அத்திவாக்கம், புள்ளிலயன், பாடியநல்லூா், வடகரை, கிராண்ட்லைன், நாரவாரிக்குப்பம் மற்றும் அழிஞ்சிவாக்கம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள மேற்படி சேமிப்பு கிடங்குகளில் நடைபெறவுள்ள பொது ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் .