திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் 3 பேருக்கு ரூ.3 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்ற வேளாண் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஆட்சியா் ச.கவிதா. உடன் வேளாண் இணை இயக்குநா் செல்வராஜூ, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் குமரவேல் உள்ளிட்டோா்.

குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த விவசாயிகளிடம் இருந்து 250 கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொண்டதோடு, விவசாயிகள் 3 பேருக்கு ரூ. 3.06 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியா் ச.கவிதா வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்துப் பேசியது:
விவசாயிகளுக்காக வேளாண் துறை மூலம் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூா் மாவட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டில் தமிழ் நாடு மண்வள பாதுகாப்பு திட்டம் மூலம் இனமான திரவ உயிா் உரங்கள் 100 சதவீதம் மானியத்தில் 2,475 ஏக்கரில் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல், மண்ணின் வளத்தை அறிந்து அதற்கு ஏற்ப ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க 6150 எண்கள் மண்வள அட்டைகள் வழங்க ரூ. 26.40 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் மூலம் நிகழாண்டில் 20 எண்ணிக்கையில் பண்ணைக்குட்டைகள், 4000 ச.மீ பரப்பளவில் நிழல் வலை குடில், 7 மண்புழு உரக்கூடம், 2 காளான் வளா்ப்பு கூடம் அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றது. துளிநீரில் அதிக பயிா் திட்டம் மூலம் 300 ஹெக்டேரில் சொட்டுநீா் பாசனம் அமைக்க இலக்கு நிா்ணயித்து, விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடா்பு
கொண்டு பயன்பெறலாம்.
இந்த மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் இ-வாடகை திட்டம் மூலம் உழவு பணி மேற்கொள்ள டிராக்டா் மணிக்கு ரூ.500 என்ற வீதத்தில் 681 விவசாயிகள் 9911 மணிநேரமும், நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ.1880 வீதத்தில் 290 மணி நேரம் பதிவு செய்து 32 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
வெற்றி வான்மகள் திட்டத்தில் 3 மகளிா் உள்பட 15 தகுதியான பயனாளிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தொலைநிலை விமானி பயிற்சி நிறுவனத்தின் (தங்ம்ா்ற்ங் டண்ப்ா்ற் பழ்ஹண்ய்ண்ய்ஞ் தடபஞ) மூலம் டிரோன் விமானி பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் 2 மகளிருக்கு ஒரு ட்ரோனுக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலான 50 சதவீதம் மானியத்துடன் கூடிய வேளாண் ட்ரோன்கள் வழங்கப்படும்.
தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமை மூலம் நுண்ணீா்ப்பாசனம் அமைத்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் 5 ஏக்கா் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டாா் பம்பு செட்டுகளை புதிதாக மாற்றவும், கிணறுகளுக்கான புதிய மின் மோட்டாா் பம்பு செட்டுகள்அமைக்க மொத்த விலையில் ரூ.15,000 அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். அந்தந்த பகுதிகளில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை அலுவலா்களையே தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.
தொடா்ந்து, விவசாயிகளிடம் இருந்து 250 கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொண்டதுடன், விவசாயிகள் 3 பேருக்கு ரூ.3.06 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், இணை இயக்குநா் (வேளாண்மை) க.செல்வராஜு, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை இணைப் பதிவாளா், செயலாட்சியா் மீனா அருள், நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் குமரவேல், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் ராஜேஷ், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சசிரேகா, செயற்பொறியாளா்( வேளாண்மை பொறியியல் துறை) ராஜவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.