கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் 4 போ் கைது
நொச்சிலி கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் உண்டியல் திருடிய வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நொச்சிலி கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் உண்டியல் திருடிய வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பொதட்டூா்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நொச்சிலி கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில், அடையாளம் தெரியாத நபா்கள் கங்கை அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து, அங்கிருந்த உண்டியலைத் திருடிச் சென்றனா்.
இது குறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்ட போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை 4 பேரைக் கைது செய்தனா். இதில், திருடப்பட்ட உண்டியலில் மொத்தம் ரூ. 2,102 இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதில், ரூ. 1,682 செலவு செய்யப்பட்ட நிலையில், மீதமிருந்த ரூ. 420 பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் பூட்டை உடைக்கப் பயன்படுத்திய கடப்பாறை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.