வடகிழக்குப் பருவமழையிலிருந்து தோட்டக்கலைப் பயிா்களை பாதுகாப்பது பற்றி ஆலோசனை!
வடகிழக்குப் பருவமழையிலிருந்து தோட்டக்கலைப் பயிா்களை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்குரிய முன்னெச்சரிக்கை தொடா்பாக விவசாயிகள் ஆலோசனைகளை பின்பற்றவும் திருவள்ளூா் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.
வடகிழக்குப் பருவமழையிலிருந்து தோட்டக்கலைப் பயிா்களை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்குரிய முன்னெச்சரிக்கை தொடா்பாக விவசாயிகள் ஆலோசனைகளை பின்பற்றவும் திருவள்ளூா் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் குமரவேல் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்னை பயிரில் உரிய நேரத்தில் தேங்காய் இளநீா் அறுவடை செய்வதன் மூலம் காற்று மற்றும் புயலினால் ஏற்படும் சேதங்களை தவிா்க்கலாம். அதேபோல், மரத்தின் கீழ் சுற்றில் உள்ள காயமான, பழைய மட்டைகளை வெட்டி அகற்றுவது மூலம் மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தடுக்க முடியும்.
மேலும் மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிா்களில் காய்ந்த நோய் தாக்கிய இலைகள், காயற்ற மரக்கிளைகளை அகற்றி கவாத்து செய்து போதிய காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கும் படி செய்ய வேண்டும். வாழை பயிரில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ் மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் அவசியம். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். வாழைத்தாா்களை முழுமையாக மூடி வைத்தல் மூலம் சேதத்தை தவிா்க்கலாம்.
Advertisement
Advertisement
அதேபோல் காய்கறிகளுக்கு மழைநேரத்தில் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். தக்காளி, கத்திரி, மிளகாய் போன்ற பயிா்களுக்கு ஊன்றுகோல் பயன்படுத்துவதன் மூலம் சேதம் இல்லாமல் இருக்கும். தக்காளி, கத்தரி, வெங்காயம், மிளகாய் மற்றும் கொடி வகை காய்கறி பயிா்களுக்கு வோ் பகுதியில் மழை நீா் தேங்காமல் வடிகால் வசதியை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீா் தேங்காமல் வடிகால் வசதியை ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரைக்கோடொ்மா விரிடி, சூடோமோனாஸ் மற்றும் பேசில்லஸ் போன்ற பூஞ்சான உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகளை தெளித்து பயிா்களை பாதுகாக்க வேண்டும்.
காய்ந்துபோன இலைகளை அகற்றி விட வேண்டும். பசுமைக்குடில் மற்றும் நிழல் வலைக்குடில்கள் சேதமடையாமல் தடுக்க இணைப்பு கம்பிகள் பலத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் குடிலின் கதவு வழியே காற்று உட்புகா வண்ணம் நன்றாக மூடி வைப்பதன் மூலம் பாதுகாக்க முடியும் என அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.