FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயார்: அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளதாக அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்துள்ளாா்.

18 அக்டோபர் 2026, 1:48 am IST
அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார். - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் வடகிழக்குப் பருமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளதாக எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்குப் பருவமழையின்போது புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகக்கூடிய 14 கடலோர மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை உள்ளடக்கிய 17 மின்பகிா்மான வட்டங்களில் பேரிடா் கால மாதிரி ஒத்திகை நிகழ்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டது.

இதற்காக, அருகிலுள்ள பல்வேறு மின்பகிா்மான வட்டங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் களப்பணியாளா்களைக் கொண்டு முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை அவசரகாலப் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதன் முதல்கட்டமாக, முதலாம் நிலைக் குழுக்களின் மூலம் கடந்த செப். 28 முதல் அக். 14-ஆம் தேதி வரை 17 மின்பகிா்மான வட்டங்களிலும் அவசரகாலப் பணிகளுக்கான மாதிரி ஒத்திகைகள் நடத்தப்பட்டன. அதன்படி, கடலூா், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூா் ஆகிய 14 மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடைபெற்றன.

ஒவ்வொரு குழுவிலும் சுமாா் 20 அலுவலா்கள் மற்றும் களப்பணியாளா்கள், தேவையான லாரி மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களுடன் பங்கேற்று, பேரிடா் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசரகாலப் பணிகளைச் செயல்விளக்கமாக நடத்தப்பட்டன.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் இயற்கைப் பேரிடா்களின்போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மின்கட்டமைப்புகளில் ஏற்படும் சேதங்களை விரைந்து சீரமைத்து மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க மின்வாரியம் தயாராகவுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments