FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

25 கிலோ கஞ்சா பறிமுதல்

சோழவரம் அருகே போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

28 அக்டோபர் 2026, 1:29 am
- பிரதிப் படம்
பகிர்:

சோழவரம் அருகே போலீஸாா் மேற்கொண்ட  வாகன சோதனையில் ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட  25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

சோழவரம் அடுத்த நல்லூா் சுங்கச்சாவடியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அரசுப் பேருந்தில் இருந்து இருவா் கைப்பையுடன் இறங்கி வேகமாக நடந்து சென்ற நிலையில் அவா்களை மடக்கி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் பையை சோதனை மேற்கொண்டதில் ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

திண்டுக்கல்லைச் சோ்ந்த மாரிமுத்து (45), ஆண்டிப்பட்டியை சோ்ந்த சந்தோஷ் (24)ஆகியோரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments