FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி, சுற்றுவட்டார கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

4 செப்டம்பர் 2026, 11:20 pm IST
பகிர்:

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

திருத்தணி ஒன்றியம் ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

திருத்தணி - அரக்கோணம் சாலை, சுப்பிரமணியபுரம் பகுதியில் கிருஷ்ணா் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையில் உற்சவா்களான ஸ்ரீராதா கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல், திருத்தணி பைபாஸ் சாலையில் திருத்தணி யாதவா் சங்கம் சாா்பில் கிருஷ்ண பெருமானின் திருவுருவப் படத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து சுமாா் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல், திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு கிருஷ்ணா் திருவீதியுலா நடைபெற்றது.

மேலும், மேல்கசவராஜபேட்டையில் உள்ள ருக்மணி- சத்யபாமா சமேத சந்தான கோபால சுவாமி கோயிலிலும், சின்னகடம்பூா் மோட்டூா் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா் கோயிலிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments