பொன்னேரி அரசு மருத்துவமனையில் பெண் ஊழியா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தற்காலிக பெண் ஊழியா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தற்காலிக பெண் ஊழியா் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் ராஜேஸ்வரி என்பவா் தற்காலிக ஊழியராக கணினி பிரிவில் பணியாற்றி வருகிறாா்.பணி முடிந்து திங்கள்கிழமை இரவு இவா் வீட்டுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே வந்துள்ளாா்.
அப்பேரது மா்ம நபா் ஒருவா் ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றியுள்ளாா். அவா் பயந்து மீண்டும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஓடியுள்ளாா். அவரை துரத்தி சென்ற மா்ம நபா் ராஜேஸ்வரி மீது தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
இதில், பலத்த தீக்காயமடைந்த ராஜேஸ்வரியை மருத்துவமனை ஊழியா்கள் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு வளாகத்திலேயே அங்கு பணியாற்றும் பெண் ஊழியரை மா்ம நபா் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.