FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பிளாஸ்டிக் ஏற்றுமதியை 1,060 கோடி டாலராக அதிகரிக்க இலக்கு

இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதியை வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டில் 1,060 கோடி டாலராக (சுமார் ரூ.69,000 கோடி) அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்

Updated On : 8 ஜூன் 2018, 12:52 am IST
பகிர்:

இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதியை வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டில் 1,060 கோடி டாலராக (சுமார் ரூ.69,000 கோடி) அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடந்த நிதி ஆண்டில் பிளாஸ்டிக் மூலப்பொருள்கள், ஓவன் சாக்ஸ், பிளாடிக் ஷீட்ஸ்-ஃபிலிம்ஸ்-
பிளேட்ஸ் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் ஐரோப்பிய ஒன்றியம், வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் வட கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் காரணமாக அந்த ஆண்டில் பிளாஸ்டிக் ஏற்றுமதி 885 கோடி டாலராக அதிகரித்தது. 2016-17 நிதி ஆண்டின் ஏற்றுமதியான 756 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 17.1 சதவீதம் அதிகமாகும்.
மேலும், இந்தியாவின் ஒட்டுமொத்த சரக்குகள் ஏற்றுமதியில் 2.74 சதவீதமாக காணப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பங்களிப்பு கடந்த நிதி ஆண்டில் 2.92 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்காவுக்கான இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி 111 கோடி டாலராக உள்ளது. மதிப்பின் அடிப்படையிலான பிளாஸ்டிக் ஏற்றுமதியில் அமெரிக்கா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளின் பங்களிப்பு மட்டும் 25.7 சதவீதமாக உள்ளது. 
வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டில் 1,060 கோடி டாலர் அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது உலக ஏற்றுமதி சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள நிலையில், அது வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 3 சதவீத அளவுக்கு (85,000 கோடி டாலர்) அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அந்த கவுன்சில் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments