டயலொக் அக்சியாட்டாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் ஏர்டெல் கையொப்பம்!
தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் தனது இலங்கை செயல்பாடுகளை டையலாக் அக்சியாட்டாவுடன் (Dialog Axiata) இணைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
புதுதில்லி: தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் தனது இலங்கை செயல்பாடுகளை டையலாக் அக்சியாட்டாவுடன் (Dialog Axiata) இணைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏர்டெல்லின் துணை நிறுவனமான பார்தி ஏர்டெல் லங்கா பிரைவேட் லிமிடெட் மற்றும் அக்சியாட்டா குரூப் பெர்ஹாட்டின் துணை நிறுவனமான டையலாக் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகியவற்றின் செயல்பாடுகளை இணைக்க டையலாக் அக்சியாட்டா, ஆக்சியாட்டா குரூப் பெர்ஹாட் மற்றும் பார்தி ஏர்டெல் லிமிடெட் ஆகியவை ஒருங்கிணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்று ஏர்டெல் தனது ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பரிவர்த்தனை முடிந்ததும் ஏர்டெல் டயலொக்கில் புதிய பங்குகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.