எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி அக்டோபரில் 36 சதவிகிதம் அதிகரிப்பு!
சோயாபீன் மற்றும் ராப்சீட் ஏற்றுமதியால் எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த மாதம், 36 சதவிகிதம் அதிகரித்து, 2.9 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
புதுதில்லி: சோயாபீன் மற்றும் ராப்சீட் ஏற்றுமதியால் எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த மாதம், 36 சதவிகிதம் அதிகரித்து, 2.9 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் எண்ணெய் பொருள்களின் ஏற்றுமதி 2,89,931 டன்னாக இருந்தது. அதே வேளையில் சோயாபீன் ஏற்றுமதி கடந்த மாதம் 40,196 டன்னிலிருந்து 87,060 டன்னாகவும், ரேப்சீட் ஏற்றுமதி 98,571 டன்னிலிருந்து 1,69,422 டன்னாகவும் அதிகரித்துள்ளது.
மேம்பட்ட விலையாலும், ஆர்ஜென்டீனாவின் ஏற்றுமதி விநியோகங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்திய சோயாபீனுக்கான வெளிநாட்டு தேவை அதிகரித்து, நாம் பயனடைந்துள்ளோம் என்று சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் எண்ணெய் வகைகளின் மொத்த ஏற்றுமதி 30 சதவிகிதம் உயா்ந்து 25,66,051 டன்னாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் சோயாபீன் ஏற்றுமதி 1,61,534 டன்னிலிருந்து 6,73,910 டன்னாக அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.