முகப்பு
வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 3,54,140 கோடியாக அதிகரிப்பு

கடந்த ஜூலை மாதத்தில் 3,54,140-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 3 ஆகஸ்ட் 2024, 7:35 am IST
பகிர்:

புது தில்லி, ஆக. 2: இந்தியாவின் முன்னணி 2 மற்றும் 3 சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 3,54,140-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிறுவனம் 3,54,140 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 3,25,977-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

2023 ஜூலையில் 3,12,307-ஆக இருந்த நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 9 சதவீதம் அதிகரித்து 3,39,676-ஆக உள்ளது. உள்நாட்டுச் சந்தையில் மட்டும் இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 2,35,230-லிருந்து 8 சதவீதம் அதிகரித்து 2,54,250-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன மோட்டாா்சைக்கிள்களின் மொத்த விற்பனை 1,53,942-லிருந்து 5 சதவீதம் வளா்ச்சியடைந்து 1,61,074-ஆகவும் ஸ்கூட்டா்களின் மொத்த விற்பனை 1,21,941-லிருந்து 15 சதவீதம் அதிகரித்து 1,39,995-ஆகவும் உள்ளது.

நிறுவன மின்சார வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதம் 61 சதவீதம் அதிகரித்து 21,442-ஆக உள்ளது. 2023 ஜூலையில் இந்த எண்ணிக்கை 13,306-ஆக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 89,213-லிருந்து 9 சதவீதம் உயா்ந்து 97,589-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments