கர்நாடகம், பிகாரில் கனிம சுரங்கங்களை கைப்பற்றிய வேதாந்தா!
வேதாந்தா குழுமமானது விற்பனைக்கு வந்த இரண்டு முக்கிய கனிம தொகுதிகளை கைப்பற்றியது.
புதுதில்லி: வேதாந்தா குழுமமானது விற்பனைக்கு வந்த இரண்டு முக்கிய கனிம தொகுதிகளை கைப்பற்றியது.
இந்த சுரங்கங்கள் கர்நாடகம் மற்றும் பிகாரில் உள்ளன என்று மும்பை பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் அமைந்துள்ள கொல்லரஹட்டி - மல்லனஹள்ளி பிளாக் 1238.122 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும் அது ஜி 4 ஆய்வு மட்டத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பிகாரில் அமைந்துள்ள ஜெஞ்சனா பிளாக் 788.85 ஹெக்டர் பரப்பளவில் ஜி3 ஆய்வு நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
பிப்ரவரி 29, 2024 மற்றும் மார்ச் 14, 2024 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளை ஏலத்திற்கு விட இந்திய அரசின் சுரங்க அமைச்சகம் முடிவு எடுத்ததை அடுத்து இந்த தொகுதிகளுக்கான டெண்டர்களை அழைத்திருந்தது.
நேரடி மின் ஏலத்தில் பங்கேற்று இந்த இரண்டு தொகுதிகளையும் கைபற்றியது வேதாந்தா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.