அசோக் லேலண்ட் வருவாய் ரூ.10,754 கோடியாக அதிகரிப்பு
அசோக் லேலண்ட்டின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.10,754 கோடியாக அதிகரித்துள்ளது.
சென்னை, ஜூலை 25: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட்டின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.10,754 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.509 கோடியாக உள்ளது.முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனம் ரூ.544 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.9,735 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.10,754 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.