முகப்பு
வணிகம்

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு! 14 நிறுவன பங்குகள் வீழ்ச்சி!

சென்செக்ஸ் சரிவை சந்தித்த நிலையில், நிஃப்டி ஏற்றத்துடன் முடிந்தது.

Updated On : 11 ஜூன் 2024, 4:47 pm IST
கோப்புப் படம்
பகிர்:

வணிகத்தின் இரண்டாவது வணிக நாளான இன்று (ஜூன் 11) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் சரிவை சந்தித்த நிலையில், நிஃப்டி ஏற்றத்துடன் முடிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33.48 புள்ளிகள் சரிந்து 76,456.59 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.044 சதவிகிதம் சரிவாகும்.

எனினும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5.65 புள்ளிகள் உயர்ந்து 23,264.85 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.024 சதவிகிதம் உயர்வாகும்.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக கோட்டாக் வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து எதிர்மறை குறியீடுடன் காணப்பட்டன.

அதற்கு அடுத்தபடியாக ஐடிசி நிறுவன பங்குகள் .095 சதவீதம் எதிர்மறையாக இருந்தது. ரிலையன்ஸ் (0.92%), சன் பார்மா (0.85%) , ஆக்ஸிஸ் வங்கி (0.54%) ஐசிஐசிஐ வங்கி (0.48%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (0.44%) சரிவை சந்தித்தன.

ஆதாயப்பட்டியலில் எல்&டி நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. எல்&டி நிறுவனத்தின் பங்குகள் 1.64 சதவீதம் உயர்வுடன் காணப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் பங்குகள் 1.26 சதவீதமும், மாருதி சுசூகி 1.14 சதவீதமும், எம்&எம் 0.92 சதவீதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 0.92 சதவீதமும், டெக் மஹிந்திரா நிறுவன பங்குகள் 0.88 சதவீதமும் உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.