24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!
சென்செக்ஸ் 561.46 புள்ளிகள் சரிந்து 77,054.94 ஆகவும், நிஃப்டி 158.95 புள்ளிகள் சரிந்து 24,052.05 ஆக நிலைபெற்றது.
மும்பை: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு மற்றும் பலவீனமான உலகளாவிய பங்குச் சந்தை உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை சரிந்து நிறைவடைந்தன.
உள்ளூரில் பங்குச் சந்தை வர்த்தகம் பலவீனமாகத் தொடங்கிய நிலையில், நிஃப்டி 50 குறியீடு 24,100 க்குக் கீழே சரிந்தது. இன்றைய அமர்வு முழுவதும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் மற்றும் வங்கிப் பங்குகளில் விற்பனை அழுத்தம் தீவிரமடைந்ததால், குறியீடு 24,000 என்ற நிலைக்கு அருகில் சென்றது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 561.46 புள்ளிகள் சரிந்து 77,054.94 ஆகவும், நிஃப்டி 158.95 புள்ளிகள் சரிந்து 24,052.05 ஆக நிலைபெற்றது. நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.4 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1% சரிந்தன.
Advertisement
Advertisement
சென்செக்ஸில் எச்.சி.எல் டெக் 4.42 சதவீதம் சரிந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. பஜாஜ் ஃபின்சர்வ், இன்டர்குளோப் ஏவியேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் பார்தி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ் மற்றும் எடர்னல் ஆகிய பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எச்.டி.எஃப்.சி. லைஃப், டாடா மோட்டார்ஸ் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் பார்தி ஏர்டெல், அப்பல்லோ மருத்துவமனைகள், சன் பார்மா, டிசிஎஸ் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் இன்று துறைசார் செயல்திறன் பெரும்பாலும் பலவீனமாகவே இருந்தது. ரியாலிட்டி பங்குகள் 2 சதவீதமும், பொதுத்துறை வங்கி பங்குகள் -1.8 சதவீதமும், ஆட்டோ -1.6 சதவீதமும், வங்கி -1.1 சதவீதமும், ஐடி -1 சதவீதமும், தனியார் வங்கி 0.8 சதவீதமும், ஆயில் & கேஸ் 0.6 சதவீதமும், எஃப்எம்சிஜி 0.6 சதவீதமும், மீடியா 0.3 சதவீதமும் மற்றும் இன்ஃப்ரா 0.3% சரிந்தன. மறுபுறம் பார்மா 1 சதவீதமும், மெட்டல் 0.60% உயர்தன.
ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கெய் 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவிலிருந்து மீண்டு உயர்ந்தன. ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு உயர்ந்த நிலையில், ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிந்து நிறைவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், நேற்று வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,062.27 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 4.26 சதவீதம் உயர்ந்து 86.85 அமெரிக்க டாலராக உள்ளது.
Indian equity benchmarks ended sharply lower on July 14.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.