முகப்பு
வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 20% உயா்வு

கடந்த செப்டம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 1 அக்டோபர், 2024 at 8:51 PM
பகிர்:

கடந்த செப்டம்பா் மாதத்தில் டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,82,495-ஆக உள்ளது. 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 4,02,553 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

Advertisement

2023-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 3,86,955-ஆக இருந்த நிறுவன இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 22 சதவீதம் வளா்ச்சியடைந்து 4,71,792-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 1,00,294-லிருந்து 11 சதவீத வளா்ச்சி கண்டு 1,11,007-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments