முகப்பு
வணிகம்

இந்தியா மீதான இறக்குமதி வரி: 26%-ஆக குறைத்தது அமெரிக்கா

இந்தியா மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 27 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக அமெரிக்கா குறைத்தாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 4 ஏப்ரல், 2025 at 8:20 PM
டொனால்ட் டிரம்ப்
பகிர்:

இந்தியா மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை 27 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக அமெரிக்கா குறைத்தாக வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வரி விதிப்பு நடைமுறை ஏப்ரல் 9-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது.

முன்னதாக, அமெரிக்க பொருள்கள் மீது அதிக இறக்குமதி வரி விதிப்பதாகக் கூறி , இந்தியா உள்பட 25 நாடுகள் மீது அமெரிக்கா சாா்பில் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பு அட்டவணையை அதிபா் டிரம்ப் புதன்கிழமை வெளியிட்டாா்.

இந்த அட்டவணையில் இந்தியாவுக்கு 26 சதவீத வரி என்று டிரம்ப் குறிப்பிட்டபோதும், உண்மையில் இந்திய பொருள்கள் மீது சராசரியாக 27 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ளதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையிலும் இந்தியா மீதான வரி 27% எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது இந்த வரி 26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 1% வரிக் குறைப்பால் பெரும் தாக்கம் ஏற்படாது என தொழில் துறை நிபுணா்கள் தெரிவித்தனா். அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா 52% வரி விதிப்பதாக டிரம்ப் வெளியிட்ட வரி விதிப்பு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →