முகப்பு
வணிகம்

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிகர லாபம் 1.8% உயர்வு!

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 1.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.316.11 கோடியாக உள்ளது.

Updated On : 17 ஏப்ரல் 2025, 9:53 pm IST
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ்
பகிர்:

புதுதில்லி: ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், 1.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.316.11 கோடியாக உள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.310.63 கோடியாக இருந்தது.

2024-25 நிதியாண்டின் 3-வது காலாண்டில் அதன் லாபம் ரூ.295 கோடியாக இருந்தது என்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மொத்த வருமானம் முந்தைய நிதியாண்டின் 4-வது காலாண்டில் ரூ.418 கோடியிலிருந்து 24 சதவிகிதம் அதிகரித்து ரூ.518 கோடியாக உள்ளது. அதே வேளையில் மொத்த செலவினங்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து ரூ.168 கோடியாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் இது ரூ.103 கோடியாக இருந்தது.

2023-24 ஆம் ஆண்டு நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,604.55 கோடியாக இருந்து தற்போது 2024-25 ஆண்டில் அதன் நிகர லாபம் ரூ.1,612.59 கோடியாக உயர்ந்து உள்ளது.

மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனம் தலா ரூ.10 ஈக்விட்டி பங்குக்கு 50 காசுகள் ஈவுத்தொகையாக வழங்க பரிந்துரைத்ததுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.73 சதவிகிதம் உயர்ந்து ரூ.246.45 ஆக முடிந்தது.

இதையும் படிக்க: தொடர்ந்து 4-வது நாளாக சென்செக்ஸ் 1,509 புள்ளிகளும், நிஃப்டி 414 புள்ளிகளுடன் உயர்ந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments