முகப்பு
வணிகம்

ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!

எம்.டி.என்.எல். நிறுவனமானது ஏழு பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.8,346.24 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 20 ஏப்ரல் 2025, 11:01 pm IST
பகிர்:

புதுதில்லி: பொதுத் துறை நிறுவனமான, எம்.டி.என்.எல். ஏழு பொதுத் துறை வங்கிகளிடமிருந்து ரூ.8,346.24 கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தவறியுள்ளதாக நிறுவனம் தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மொத்த கடன் மார்ச் 31, 2025 நிலவரப்படி ரூ.33,568 கோடியை எட்டியுள்ளதாக தனது ஏப்ரல் 19ஆம் தேதியிட்ட தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா இடமிருந்து ரூ.3,633.42 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் இந்தியாவிலிருந்து ரூ.2,374.49 கோடியும், பாங்க் ஆப் இந்தியாவிலிருந்து ரூ.1,077.34 கோடியும், பஞ்சாப் நேஷனல் இந்தியாவிலிருந்து ரூ.464.26 கோடியும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் ரூ.350.05 கோடியும், யூகோ வங்கியில் ரூ.266.30 கோடியும், அசல் மற்றும் வட்டியுடன் ரூ.180.3 கோடியும் கடன் பாக்கி வைத்துள்ளது.

Advertisement

Advertisement

நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.33,568 கோடியாக உள்ளது. இதில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டியது ரூ.8,346 கோடியும், மாநில அரசு பத்திரங்களில் ரூ.24,071 கோடியும் மற்றும் தொலைத் தொடர்புத் துறையிடமிருந்து பெற்ற ரூ.1,151 கோடி கடன் ஆகியவை இதில் அடங்கும்.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 67,783 கோடி டாலராக உயா்வு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments