டிவிஎஸ் சப்ளை செயின் லாபம் ரூ.71.16 கோடியாக உயர்வு!
டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் லிமிடெட், முதல் காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.71.16 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: உலகளாவிய சப்ளை செயின் தீர்வுகள் வழங்குநரான டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.71.16 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.7.47 கோடி வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து வருவாய் ரூ.2,592.31 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.2,539.39 கோடியாக இருந்தது.
Advertisement
இது குறித்த கருத்து தெரிவித்த டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் குளோபல் தலைமை நிதி அதிகாரி ஆர் வைத்தியநாதன், மேம்பட்ட லாப விநியோகம் மற்றும் எங்கள் மாற்று முயற்சிகளை ஒழுங்காக செயல்படுத்தியதன் மூலம், நிதியாண்டு 2026ல் நிலையான முன்னேற்றத்துடன் தொடங்கினோம் என்றார்.
இதையும் படிக்க: என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி
Global supply chain solutions provider TVS Supply Chain Solutions Ltd has reported a consolidated profit after tax for the April-June 2025 quarter.