போக்கோ எம் 7 படம் / நன்றி - போக்கோ
வணிகம்

அதிக பேட்டரி திறனுடைய போக்கோ எம் 7! இந்தியாவில் அறிமுகம்!

மத்திய ரக ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 7000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

போக்கோ எம் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய ரக ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 7000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷாவ்மி நிறுவனத்தின் கிளை நிறுவனமான போக்கோ, இந்திய பயனர்களைக் கவரும் வகையில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

போக்கோவின் தயாரிப்புகள் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த பயனர்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.

தற்போது போக்கோவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய போக்கோ எம் 7 என்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

மூன்று வகையான வேரியன்ட்களில் போக்கோ எம் 7 கிடைக்கிறது.

8GB+128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 13,999,

8GB+256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 14,999

6GB+128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 12,999

தற்போது சந்தையில் அறிமுகமாகியிருந்தாலும், ஆக. 19ஆம் தேதி முதல் இணைய விற்பனை தளங்களில் கிடைக்கும்.

போக்கோ எம் 7 சிறப்பம்சங்கள்

  • மூன்று வகையான வண்ணங்களில் கிடக்கின்றன. நீலம், கருப்பு, சில்வர் நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன.

  • 6.9 அங்குல எச்.டி. திரை கொண்டது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில் 288Hz திறன் கொண்டது.

  • ஸ்நாப்டிராகன் 6எஸ் மூன்றாம் தலைமுறை புராசஸர் கொண்டது.

  • 16GB வரை உள் நினைவகம் (RAM) கொண்டது. இதனால், எந்தவித செயலிகளையும் தரவிறக்கம் செய்து சுமுகமாக பயன்படுத்த முடியும்.

  • 7000mAh பேட்டரி திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கேமரா பிரியர்களுக்காக... விவோ வி 60 அறிமுகம்!

POCO M7 Plus 5G Launched in India with 7000mAh Battery and Snapdragon 6s Gen 3: Check Out Details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - நேரலை! இன்ப அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்!

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு!

2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும்!

திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள்!

கலீல் ஜிப்ரானின் கவிதையை மேற்கோள்காட்டிய தங்கம் தென்னரசு!

SCROLL FOR NEXT