6 கியர்கள், பிரேக் அலர்ட்... பஜாஜ் பல்சரில் புதிய பைக் அறிமுகம்!
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் புதிதாக பல்சர் என் 250எஸ்எஸ் என்ற இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் புதிதாக பல்சர் என் 250எஸ்எஸ் என்ற இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடலில் 6 கியர்களுடன் பிரேக் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அதீத வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், வாகனத்தில் உள்ள நான்குபுற ஆரஞ்சு விளக்குகளும் தானியங்கியாக விட்டு விட்டு ஒளிர்ந்து பின்புறம் மற்றும் முன்புறம் செல்லும் வாகனங்களை எச்சரிக்கும். இதன்மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும் என பஜாஜ் நிறுவனம் கூறுகிறது.
ஏற்கெனவே ஹீரோ கிளாமர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் இருசக்கர வாகனங்களில் இந்த அம்சம் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது பல்சர் என் 250எஸ்எஸ் வாகனத்திலும் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தியாவில் ரு. 1,59,406-க்கு (ஷோரூம் விலை) விற்பனை செய்யப்படுகிறது. பல்சர் என்250 இருசக்கர வாகனத்தை விட ரூ.14000 விலை அதிகமாகும். எனினும் பழைய வாகனத்தை விட புதிய வாகனம் பல மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
6 கியர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பழைய மாடலில் 5 கியர்கள் மட்டுமே இருந்தன.
கூகுள் மேப்ஸ். இதன்மூலம் வாகனத்திலேயே செல்லும் வழியை அறிந்துகொள்ளலாம்.
மின்சார திராட்டல் பாடி. இதன்மூலம் எளிமையாக வாகனத்தை ஸ்டார்ட் செய்யலாம்.
ஸ்போர்ட்ஸ் ஷிப்டர்
பேனிக் பிரேக் அலர்ட் உள்ளது. இதன்மூலம் விபத்துகள் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்படும்.
249cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.
24.6bhp பவரை உருவாக்கும் வகையில் 4 வால்வு செட் அப் உடையது.
22Nm விசை உருவாகும்.
Bajaj Auto has launched the Pulsar N250SS in India at Rs 1,59,406
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.