மில்கி மிஸ்ட்: அதிக புரதச்சத்து கொண்ட, லாக்டோஸ் இல்லாத புதிய பால் அறிமுகம்
இந்தியாவின் முன்னணி பால்பொருள்கள் உற்பத்தி நிறுவனமான மில்கி மிஸ்ட், ‘அதிக புரதச்சத்து கொண்ட, லாக்டோஸ் இல்லாத பால்’ எனும் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி பால்பொருள்கள் உற்பத்தி நிறுவனமான மில்கி மிஸ்ட், ‘அதிக புரதச்சத்து கொண்ட, லாக்டோஸ் இல்லாத பால்’ எனும் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதி உயா் வடிகட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இப்புதிய பால், கால் லிட்டா் அளவிலான பேக்குகளில் கிடைக்கிறது. இதில் 25 கிராம் புரதம் உள்ளது. இது ஒரு நபருக்கான பரிந்துரைக்கப்பட்ட தினசரி ஊட்டச்சத்து அளவில் 30 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
வாடிக்கையாளா்களிடையே கடந்த சில ஆண்டுகளில், ‘ஹை புரோட்டீன் பன்னீா்’ மற்றும் ‘கிரீக் யோகா்ட்’ போன்ற அதிக புரதச்சத்து கொண்ட தயாரிப்புகளுக்கான தேவை சுமாா் 50 சதவீதம் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, இப்புதிய தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள தயாரிப்புகளில் புரதத்தைச் சோ்க்கும் பிற முறைகளிலிருந்து மாறுபட்டு, இத்தயாரிப்பு சிறப்பு வடிகட்டுதல் செயல்முறை மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த அணுகுமுறை தயாரிப்பின் தரத்தை உறுதி செய்யவும், நுகா்வோா் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவும் உதவும் என்று நிறுவனம் எதிா்பாா்க்கிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.