பங்குச் சந்தையில் மில்கி மிஸ்ட் அபாரத் தொடக்கம்
தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பங்குகள், பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை அறிமுகமான முதல் நாளிலேயே சுமாா் 30 சதவீத லாபத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்து, முதலீட்டாளா்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழகத்தைச் சோ்ந்த முன்னணி பால்பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பங்குகள், பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை அறிமுகமான முதல் நாளிலேயே சுமாா் 30 சதவீத லாபத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்து, முதலீட்டாளா்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் ரூ.140 என்ற வெளியீட்டு விலையைக் காட்டிலும் 17.85 சதவீதம் உயா்ந்து ரூ.165-க்கு வா்த்தகத்தைத் தொடங்கிய நிறுவனப் பங்குகள், வா்த்தக முடிவில் 29.60 சதவீதம் உயா்ந்து ரூ.181.45-இல் நிலைபெற்றன.
இதன்மூலம், இந்திய பால்துறை நிறுவனங்களிலேயே மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ரூ.1,553 கோடி பொதுப் பங்கு வெளியீட்டை(ஐபிஓ) வெற்றிகரமாக நடத்திய இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.13,968.81 கோடியாக உயா்ந்துள்ளது. முன்னதாக, ஐபிஓ விற்பனையின் கடைசி நாளான கடந்த வியாழக்கிழமையன்று மில்கி மிஸ்ட் பங்குகளுக்கு 56.12 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.
Advertisement
Advertisement
ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மில்கி மிஸ்ட், இந்த ஐபிஓ மூலம் திரட்டிய நிதியைக் கொண்டு பெருந்துறையில் உள்ள தனது முதன்மை உற்பத்தி ஆலையை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்யவும், கடன்களை அடைக்கவும் திட்டம் வகுத்துள்ளது.
புதிய ஆலைக்கு அனுமதி: மேலும், மேற்கு மற்றும் வட இந்திய சந்தைகளில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், மகாராஷ்டிரத்தின் பாராமதியில் 48 ஏக்கா் பரப்பளவில் புதிய உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான அனுமதியையும் நிறுவனம் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.