FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வீழ்ச்சிக்குப் பிறகு எழுச்சியின் பாதையில் இந்திய பங்குச் சந்தை!

இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை மீண்டன.

25 செப்டம்பர் 2026, 5:48 pm IST
பங்குச் சந்தை - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: கடுமையான சரிவுக்குப் பிறகு, முன்னணி வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் வாகனத் துறைப் பங்குகளில் காணப்பட்ட, மதிப்பு சார்ந்த கொள்முதலை அடுத்த, இன்றைய வர்த்தகத்தில், முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டன.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 315.20 புள்ளிகள் உயர்ந்து 73,895.74 புள்ளிகளாக நிறைவடைந்தன. இதில் 19 பங்குகள் ஏற்றத்துடனும், 11 பங்குகள் சரிவுடனும் வர்த்தகமான நிலையில், அதிகபட்சமாக 73,968.05 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 73,477.77 புள்ளிகளையும் தொட்ட நிலையில் 490.28 புள்ளிகள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது.

50 பங்குகளைக் நிஃப்டி 77.40 புள்ளிகள் உயர்ந்து 23,140.50 புள்ளிகளாக நிலைபெற்றது. நிஃப்டி-யில் இன்று 34 பங்குகள் ஏற்றம் கண்ட நிலையில், 15 பங்குகள் சரிவுடன் முடிவடைந்த நிலையில் ஒரு பங்கு மட்டும் மாற்றமின்றி இருந்தது.

Advertisement

Advertisement

பெரும்பாலான வாகனப் பங்குகள் லாபத்துடன் முடிவடைந்தன. மஹிந்திரா & மஹிந்திரா பங்குகள் 2 சதவீதம் உயர்ந்து, அதிக லாபம் ஈட்டிய பங்குகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.

எச்டிஎஃப்சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், அதன் பங்கு கவனம் பெற்றதால், நிறுவனத்தின் பங்குகள் சுமார் 1 சதவீதம் உயர்ந்தன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி பங்குகளில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால், பேங்க் நிஃப்டி குறியீடு 142 புள்ளிகள் அதிகரித்து 55,580 ஐ எட்டியது. ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை நிஃப்டி-யில் அதிக அளவில் உயர்ந்தன.

வர்த்தக அளவில் அதிகரித்த நிலையில், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பங்குகள் 0.74% உயர்ந்து ரூ. 409.00 ஆக நிறைவடைந்தன.

சென்செக்ஸில், ஆக்சிஸ் வங்கி அதிகபட்சமாக 2.82 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 2.24 சதவீதமும், ஏசியன் பெயின்ட்ஸ் 1.93 சதவீதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.21 சதவீதமும், ஹெச்சிஎல் டெக் 1.17 சதவீதமும், டைட்டன் 1.01 சதவீதமும் ஏற்றம் கண்டன. மறுபுறம் ட்ரெண்ட் அதிகபட்சமாக 1.41 சதவீதம் சந்தித்தது. இதனையடுத்து இன்ஃபோசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.14 சதவீதம் சரிந்த நிலையில், ஸ்மால்கேப் 100 குறியீடு 0.15 சதவீதம் உயர்ந்தது.

ஆசிய சந்தையில், நிக்கி 225 குறியீடு உயர்ந்த நிலையில், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன. விடுமுறை காரணமாக சீனா மற்றும் தென் கொரிய பங்குச் சந்தை மூடப்பட்டிருந்தன.

ஐரோப்பாவில் சந்தை உயர்வாக வர்த்தகமான நிலையில், அமெரிக்க பங்குச் சந்தை பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 1.10 சதவீதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 105.4 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Benchmark stock indices Sensex and Nifty rebounded on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments