FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தில் சரிவுடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை!!

சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தின் தொடக்கத்தில், முதலீட்டாளர்கள் அதிக ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கின.

8 நவம்பர் 2026, 4:23 pm
கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை
பகிர்:

மும்பை: சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தின் தொடக்கத்தில், சன் பார்மா, டாடா ஸ்டீல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கியதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கின.

பங்குச் சந்தையில் நிலவும் ஏற்றப் போக்கைத் தொடர்ந்து, இந்த சிறப்பு முகூர்த்த அமர்வில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 401.80 புள்ளிகள் உயர்ந்து 81,406 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 79.15 புள்ளிகள் உயர்ந்து 25,109.40 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 29 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 43.95 புள்ளிகள் சரிந்து 24,986.40 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் உள்ள 30 நிறுவனங்களில், டாடா ஸ்டீல், சன் பார்மா, அதானி போர்ட்ஸ், மாருதி மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் இன்ஃபோசிஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், டிரென்ட் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய பங்குகள் சரிந்தன.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு, சிறப்பு முகூர்த்த வர்த்தகத்தில், சென்செக்ஸ் 3,398.32 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 838.25 புள்ளிகள் குறைந்தது.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றை முன்தினம் (வெள்ளிக்கிழமை) ரூ. 13,749.82 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று, சென்செக்ஸ் 1,718.01 புள்ளிகள் உயர்ந்து, அன்றைய உச்சபட்ச அளவான 81,028.02 ஆக நிலைபெற்றது. நிஃப்டி 493.75 புள்ளிகள் உயர்ந்து, அன்றைய உச்சபட்ச அளவான @5,030.35 ஆக நிறைவடைந்தது.

கடந்த ஏழு அமர்வுகளில், சென்செக்ஸ் 7,781.99 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 2,331.5 புள்ளிகள் உயர்ந்துள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை அன்று உயர்வுடன் முடிவடைந்தன.

summary

Indian benchmark indices ended Sunday's special Diwali trading session marginally lower.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.