வணிகம்

பி.சி. ஜுவல்லர் நிறுவனத்தின் லாபம் ரூ.148 கோடியாக உயர்வு!

பி.சி. ஜுவல்லர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.147.96 கோடி ஆக அதிகரித்துள்ளது.

DIN

புதுதில்லி: பி.சி. ஜுவல்லர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.147.96 கோடி ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.197.98 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் நிறுவனத்தின் 3-வது காலாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.43.48 கோடியிலிருந்து பல மடங்கு அதிகரித்து ரூ.683.44 கோடியானது என்று நிறுவனம் தனது ஒழுங்குமுறை தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பண்டிகை மற்றும் திருமண நிகழ்வுகள் காரணமாக டிசம்பர் காலாண்டில் நிறுவனமானது வலுவான விற்பனையை செய்துள்ளது என்று பி.சி.ஜுவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.

பி.சி. ஜுவல்லர்ஸ் இந்தியாவில் 15 மாநிலங்களில் 41 நகரங்களில் 55 ஷோரூம் மற்றும் 3 ஃபிரான்சைஸ் ஷோரூம்கள் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: திரிவேணி இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிகர லாபம் 69% சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT