FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பாட்டா இந்தியா லாபம் 1.2% உயர்வு!

முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமான, பாட்டா இந்தியா லிமிடெட், டிசம்பர் 2024 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.58.7 கோடி ஆக உள்ளது.

Updated On : 10 பிப்ரவரி 2025, 9:32 pm IST
பகிர்:

புதுதில்லி: முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமான, பாட்டா இந்தியா லிமிடெட், டிசம்பர் 2024 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.58.7 கோடி ஆக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.57.97 கோடியாக நிகர லாபம் இருந்தது என பாட்டா இந்தியா தனது ஒழுங்குமுறை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் அதன் வருவாய் 1.69 சதவிகிதம் உயா்ந்து ரூ.918.79 கோடியானது.

Advertisement

Advertisement

நிறுவனத்தின் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனளிப்பு வரம்பு 141 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து, வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.58 கோடியாக உள்ளது என்று பாட்டா இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிசம்பர் காலாண்டில் அதன் மொத்த செலவினம் ரூ.840.57 கோடியாக இருந்தது. இதர வருமானத்தையும் சேர்த்து அதன் மொத்த வருமானம் 1.54 சதவிகிதம் உயர்ந்து ரூ.928.65 கோடியாக உள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி குஞ்சன் ஷா தெரிவிக்கையில், சந்தை சற்று மௌனமாக இருந்தபோதிலும், பாட்டா அதிக எண்ணிக்கையில் வால்யூம்களை செய்ததுள்ளது என்றார்.

பாட்டா இந்தியா லிமிடெட் பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 0.39 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.1,339.55 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: 26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் லாபம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments