ஐடிசி காலாண்டு லாபம் 15.6% சரிவு!
ஐடிசி 2026-27 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த லாபம் 15.6 சதவீதம் சரிந்து ரூ. 4,508.79 கோடியாக இருப்பதாக அறிவித்தது.
புதுதில்லி: 2026-27 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில், ஐடிசி-யின் ஒருங்கிணைந்த லாபம் 15.6 சதவீதம் சரிந்து ரூ. 4,508.79 கோடியாக இருப்பதாக நிறுவனம் இன்று அறிவித்தது.
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் ரூ. 5,343.41 கோடியாக இருந்தது.
2027 நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில், ஐடிசி-யின் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 27.82 சதவீதம் அதிகரித்து ரூ. 29,409.82 கோடியாக உள்ளது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், கடந்த ஆண்டிலிருந்த ரூ. 23,129.35 கோடியுடன் ஒப்பிடுகையில், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் அது 27.64 சதவீதம் அதிகரித்து ரூ. 29,523.3 கோடியாக உள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் போக்கின் காரணமாக நிச்சயமற்ற தன்மை நிலவியது, இது கச்சா எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலையை கடுமையான ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியதோடு, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியிலும் குறிப்பிடத்தக்க இடையூறுகளை உருவாக்கியது.
ஐடிசி இன்ஃபோடெக், சூர்யா நேபாளம், ஸ்ப்ரவுட்லைஃப் ஃபுட்ஸ் மற்றும் ஐடிசி ஹோட்டல்ஸ் தலைமையிலான குழும நிறுவனங்கள் வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக ஐடிசி தெரிவித்துள்ளது.
ஜூன் வரையான காலாண்டில் மொத்தச் செலவு 48 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அதிகரித்து ரூ. 24,809.95 கோடியாக உள்ளது. பிற வருமானங்களையும் உள்ளடக்கிய நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த வருமானம், ஆய்வுக்கு உட்பட்ட காலாண்டில் 26.74 சதவீதம் அதிகரித்து ரூ. 30,179.01 கோடியாக உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், ஐடிசி பங்கின் விலை 1.51% சரிந்து ரூ.280.95 ஆக நிலைபெற்றது.
ITC Ltd on Friday reported a 15.6 per cent decline in its consolidated profit to Rs 4,508.79 crore for the June quarter of 2026-27.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.