FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: சரிவில் முடிந்த பங்குச்சந்தை!

சென்செக்ஸ், நிஃப்டி தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவு...

Updated On : 20 பிப்ரவரி 2025, 7:03 pm IST
பகிர்:

மும்பை : பங்குச்சந்தை வியாழக்கிழமை(பிப். 20) சரிவில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவில் முடிவடைந்தன.

சென்செக்ஸ் இறுதியில் 203.22 புள்ளிகள் (0.27 சதவீதம்) இழப்புடன் 75,735.96-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி இறுதியில் 19.75 புள்ளிகள் (0.09 சதவீதம்) இழப்புடன் 22,913.15-இல் நிறைவடைந்தது.

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை எதிரொலியால், முக்கிய வங்கிகள் சில மற்றும் மாருதி சுஸூகி பங்குகள் சரிவை கண்டுள்ளன.

Advertisement

Advertisement

மாருதி சுஸூகி பங்குகள் 1.8 சதவீதமும் விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.5 சதவீதமும் கோட்ப்ரே பிலிப்ஸ் பங்குகள் 9 சதவீதமும் ஐடிசி பங்குகள் 1.1 சதவீதமும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் 2.4 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.

இன்னொருபுறம், வர்த்தக நாளான வியாழக்கிழமை(பிப். 20) டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு 0.3 சதவீதம் உயர்ந்து 86.66 ஆக நிற்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments