டாலருக்கு நிகரான ரூபாய் 18 காசுகள் சரிந்து ரூ.85.94 ஆக நிறைவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 18 காசுகள் சரிந்து 85.94 ஆக நிறைவடைந்தது.
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 18 காசுகள் சரிந்து 85.94 ஆக நிறைவடைந்தது. இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற நிலையில் வெளிநாடுகளில் உள்ள முக்கிய நாணயங்களுக்கு நிகரான அமெரிக்க டாலர் வலுவடைந்து வருகிறது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.02 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.74 முதல் ரூ.86.05 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 18 காசுகள் சரிந்து ரூ.85.94ஆக நிறைவடைந்தது.
நேற்றைய அமர்வில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.76 ஆக நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 82,634.48 புள்ளிகளுடன் நிறைவு!
The rupee declined 18 paise against the US dollar to close at 85.94.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.