FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

அறிமுகமான டாடா எலெக்ட்ரிக் புதிய ஹாரியர்.இவி கார்!

டாடா மோட்டார்ஸ் இன்று அதன் மின்சார வாகன வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

Updated On : 3 ஜூன் 2025, 7:23 pm IST
டாடா எலெக்ட்ரிக் ஹாரியர்.இவி
பகிர்:

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் இன்று அதன் மின்சார வாகன வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இது மின்சார எஸ்யூவி-யான ஹாரியர்.இவி-ஐ இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது 500 கி.மீ. அதிகமான வரம்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதத்திற்கு சுமார் 25,000 யூனிட்கள் விற்பனையாகும் பிரதான பிரீமியம் எஸ்யூவி பிரிவிலிருந்து வாடிக்கையாளர்களை புதிய எஸ்யூவி கார் ஈர்க்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

ஹாரியர்.இவி-இன் விலை ரூ.21.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்கும் நிலையில் அதன் முன்பதிவு ஜூலை 2 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

உயர் ரக எஸ்யூவி பிரிவில், நாங்கள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு வரும் நிலையில், இந்த பிரிவில் உள்ள செயல்திறனில் உற்சாகமளிக்கும் வகையில் ஒரு தயாரிப்பைக் கொண்டு வருகிறேம் என்றார் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா.

தற்போது ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு தயாரிப்புகளுடன் உயர் எஸ்யூவி பிரிவில் சுமார் 25 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.

ஆல் வீல் டிரைவ் திறன் மற்றும் 504 என்.எம். டார்க் உடன் வரும் ஹாரியர்.இவி எங்களின் சந்தைப் பங்கை வெகுவாக விரிவுபடுத்த உதவும்.

ஹாரியர்.இவி காரின் அம்சங்கள் வருமாறு:

  • பனோரமிக் சன்ரூஃப்

  • ஆம்பியன்ட் லைட்டிங்

  • பவர்டு முன்பக்க சீட்கள்

  • டால்பி அட்மாஸ் 5.1 வசதியுடன் 10 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம்

  • வெஹிக்கிள்-2-வெஹிக்கிள் சார்ஜிங் வசதிகள்

  • கனெக்டட் கார் தொழில்நுட்பம்

  • நான்கு டிரைவ் மோடுகள்

  • முழுவதுமான டிஜிட்டல் ரியர் வியூ மிரர்

  • ஆட்டோ பார்க் அசிஸ்ட்

  • ஆறு டெரைன் மோடுகள்

  • இல்லுமினேட்டட் டாடா லோகோ

  • நான்கு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல்

  • 14.53 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் உடன் டிஜிட்டல் டிஸ்பிளே

உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹாரியர்.இவி எலெக்ட்ரிக் கார் இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வருகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் தொடக்கநிலை வேரியன்ட்களில் 65 kWh பேட்டரி பேக் உடனும் உயர்நிலை வேரியன்டில் 75 kWh பேட்டரி உடன் வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments