மின்சார வாகன விற்பனையில் மஹிந்திராவை முந்திய டாடா மோட்டார்ஸ்!
அக்டோபர் மாதத்தில் பயணியர் மின்சார வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது குறித்து...
2026 அக்டோபர் மாதத்தில் பயணியர் மின்சார வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அக்டோபரில் மட்டும் 14,669 பயணியர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மின்சார வாகன விற்பனையில் அனைத்து வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் கவனம் செலுத்தி வருகின்றன.
தனிப் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பொதுப்போக்குவரத்துப் பயன்பாட்டிலும் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
Advertisement
Advertisement
அந்தவகையில் கடந்த அக்டோபரில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 14,669 பயணியர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக மஹிந்திராவில் 8,538 வாகனங்களும், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் 5,939 வாகனங்களும், வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனத்தில் 2,571 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று கியாவில் 1,395 பயணியர் வாகனங்கள், மாருதி சுசூகியில் 1,200, ஹுண்டாய் 760, பிஒய்டி 737, பிஎம்டபிள்யூ 462, டெஸ்லா 291, டொயோட்டா 190, மெர்சிடஸ் பென்ஸ் 62, வோல்வோ ஆட்டோ 37 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.