முகப்பு

விரைவில் இந்தியாவில் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்யும் பென்ட்லி!!

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லி மோட்டார்ஸ், அதன் முதல் மின்சார காரான 'டோர்கல்' மாடலை அடுத்த ஆண்டின் 2 வது பாதியில் அறிமுகப்படுத்த உள்ளது.

10 வினாடிகள் முன்பு
விரைவில் இந்தியாவில் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்யும் பென்ட்லி!!
Bentley Motors - சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லி மோட்டார்ஸ்.
பகிர்:

புதுதில்லி: பிரிட்டிஷ் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லி மோட்டார்ஸ், அதன் முதல் மின்சார காரான 'டோர்கல்' மாடலை அடுத்த ஆண்டின் 2 வது பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள சந்தையாக இந்தியா இருக்கும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வணிகத்தில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை இது வழங்கும் என்று பென்ட்லி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஃபிராங்க்-ஸ்டெஃபென் வாலிசர் தெரிவித்தார்.

பென்ட்லி நிறுவனத்தின் தலைவர் வாலிசர் மேலும் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

இந்தியாவில் இறக்குமதி வரி எவ்வாறு இருந்தாலும், பென்ட்லி கார் இந்தியாவில் தயாரிக்க எந்த விதத் திட்டமும் இல்லை. அதே வேளையில், பென்ட்லி கார் பிரிட்டனில் உள்ள க்ரூ நகரில் அமைந்துள்ள அதன் தலைமையக ஆலையிலிருந்தே இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்.

இதற்கான காரணத்தை விளக்கிய வாலிசர், பென்ட்லி வாகனங்கள் சிக்கலான பொறியியல், கைவினைத்திறன் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டிருப்பதால், உள்ளூர் உற்பத்தி வணிக ரீதியாக சாத்தியமற்றது. அதே வேளையில், நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதன் வாகனங்கள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்டவை என்பதை வாடிக்கையாளர்கள் கெளரவமாக பார்க்கிறார்கள்.

வரி எதுவாக இருந்தாலும், உற்பத்தித் தரப்பில் நாங்கள் ஒருபோதும் எதிர்வினையாற்ற மாட்டோம். மறுபுறம், க்ரூவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் வரும் வாகனத்தை வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். நான் எப்போதும், சுவிஸிலிருந்து வர வேண்டிய ஒரு கைக்கடிகாரத்தை உடன் இதை ஒப்பிடுவேன். ஒரு பிரிட்டிஷ் சொகுசு கார் இங்கிலாந்திலிருந்து தான் வர வேண்டும்.

பென்ட்லி நிறுவனத்தின் முதல் மின்சாரக் காரான 'டோர்கல்' அடுத்த ஆண்டின் மத்தியில் உற்பத்தியைத் தொடங்கும். இந்தக் காரின் முதல் கட்ட டெலிவரி 2027ல் கோடைக்காலத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் அறிமுகம் முதற்கட்டமாக பிரிட்டன், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய சந்தைகளில் தொடங்கும். அதனைத் தொடர்ந்து, சீனா மற்றும் பிற சர்வதேச சந்தைகளிலும் இந்தக் கார் அறிமுகப்படுத்தப்படும்.

summary

British luxury carmaker Bentley Motors will launch its first fully electric vehicle Torcal in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.