முகப்பு
வணிகம்

ஐபிஓ வெளியீட்டு விலைக்கு இணையாக பட்டியலிடப்பட்ட ஸ்கோடா டியூப்ஸ்!

எஃகு குழாய்கள் மற்றும் குழாய்கள் உற்பத்தியாளர் ஸ்கோடா டியூப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று வெளியீட்டு விலையான ரூ.140 க்கு இணையாக பட்டியலிடப்பட்டு பிறகு 5 சதவிகிதம் வரை உயர்வு.

Updated On : 4 ஜூன் 2025, 6:50 pm IST
ஸ்கோடா டியூப்ஸ்
பகிர்:

புதுதில்லி: துருப்பிடிக்காத எஃகு குழாய்கள் மற்றும் குழாய்கள் உற்பத்தியாளர் ஸ்கோடா டியூப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) வெளியீட்டு விலையான ரூ.140க்கு இணையாக பட்டியலிடப்பட்டு பிறகு 5 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மற்றும் நிஃப்டி-யில் இந்த பங்குகள் ரூ.140ல் வர்த்தகத்தைத் தொடங்கின. பிறகு நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ-யில் 4.96 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.146.95 ஆகவும் என்எஸ்இ-யில் அதன் பங்குகள் 5 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.147 ஆக முடிந்தது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.880.36 கோடியாக இருந்தது. ஐபிஓ இறுதி நாளன்று ஸ்கோடா டியூப்ஸ் 53.78 மடங்கு சந்தாவைப் பெற்ற நிலையில் அதன் ஆரம்ப பங்கு விற்பனை விலை ரூ.130 முதல் ரூ.140 என குழு முடிவெடுத்தது.

Advertisement

Advertisement

ஐபிஓ மூலம் வரும் நிதியை துருப்பிடிக்காத குழாய்கள் மற்றும் குழாய்களின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கும், பணி மூலதனத் தேவைகள் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றது நிர்வாகம்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.85.90ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments