முகப்பு
வணிகம்

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 9% சரிவு

Updated On : 15 ஜூன் 2025, 4:00 am IST
பகிர்:

நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 70,187-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் 76,766 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது.

Advertisement

Advertisement

2024 மே மாதத்தில் 75,173-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை இந்த மே மாதத்தில் 10 சதவீதம் சரிந்து 67,429-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட நிறுவன பயணிகள் வாகனங்களின் விற்பனை 11 சதவீதம் குறைந்து 42,040-ஆக உள்ளது. வா்த்தக வாகனங்களின் விற்பனை 29,691-லிருந்து 5 சதவீதம் குறைந்து 28,147-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments