முகப்பு
வணிகம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ​​8.25% ஆக நிர்ணயம்!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024-25 நிதியாண்டுக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.25% ஆக நிர்ணயம் செய்தது.

Updated On : 1 மார்ச் 2025, 2:51 pm IST
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024-25 நிதியாண்டுக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.25% ஆக நிர்ணயம் செய்தது. பிப்ரவரி 2024ல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மீதான வட்டி விகிதம் 2023-24 ஆம் ஆண்டு 8.25 சதவிகிதமாக உயர்த்தியது. இது 2022-23ல் 8.15 சதவிகிதமாக இருந்தது.

மார்ச் 2022ல், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது 2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை அதன் ஏழு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக 8.1 சதவிகிதமாகக் குறைத்தது. 2020-21ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் மீதான 8.10 சதவிகித வட்டி விகிதம் 1977-78 க்குப் பிறகு இது மிகக் குறைவானது. அப்போது ஈபிஎஃப் வட்டி விகிதம் 8 சதவிகிதமாக இருந்தது.

2020-21 ஆம் ஆண்டிற்கான ஈபிஎஃப் வைப்புத்தொகைக்கு 8.5 சதவிகித வட்டி விகிதத்தை மத்திய அறங்காவலர் குழு ஆனது மார்ச் 2021ல் முடிவு செய்தது. அரசு ஒப்புதலுக்குப் பிறகு, 2024-25ஆம் ஆண்டிற்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஏழு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைத்தது.

Advertisement

Advertisement

மார்ச் 2020ல், வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதம் 2019-20 ஆம் ஆண்டிற்கான ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.5 சதவிகிதமாகவும், இது 2018-19 க்கு வழங்கப்பட்ட 8.65 சதவிகிதத்திலிருந்து குறைக்கப்பட்டது. இபிஎஃப்ஓ தனது சந்தாதாரர்களுக்கு 2016-17ஆம் ஆண்டில் 8.65 சதவிகித வட்டியும், 2017-18ஆம் ஆண்டில் 8.55 சதவிகித வட்டியும் வழங்கியுள்ளது.

2015-16 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.8 சதவிகிதத்திற்கும் சற்று அதிகமாக இருந்தது. ஓய்வூதிய நிதி அமைப்பு 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டுகளில் 8.75 சதவிகித வட்டி விகிதத்தை வழங்கியது. இது 2012-13ஆம் ஆண்டிற்கான 8.5 சதவிகிதத்தை விட அதிகமாகும். 2011-12ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.25 சதவிகிதமாக இருந்தது.

இதையும் படிக்க: ஆந்திரத்தில் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் அபராதம், சிறை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments