முகப்பு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் உயா்வு!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், தனது வைப்பு நிதி வட்டி விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரிப்பு.

9 அக்டோபர் 2026, 10:18 pm
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிரந்தர வைப்பு நிதி வட்டி விகிதம் உயா்வு!
Shriram Finance
பகிர்:

புதுதில்லி: ஸ்ரீராம் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிசர்வ் வங்கி இந்த வாரத் தொடக்கத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, தனது வைப்பு நிதி வட்டி விகிதங்களை 40 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளதாக இன்று அறிவித்தது.

  • 12 மாத கால வைப்பு நிதிக்கு இனி 7 சதவீத வட்டி கிடைக்கும். இது தற்போதைய வட்டி விகிதத்தை விட 15 புள்ளிகள் அதிகம்.

  • 15 மாதங்கள் மற்றும் 24 முதல் 35 மாதங்கள் வரையிலான முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு, தற்போதைய 7.1 சதவீதத்திற்குப் பதிலாக 7.5 சதவீத வட்டி கிடைக்கும்.

    Advertisement

    Advertisement

  • 36 முதல் 60 மாதங்கள் வரையிலான காலத்திற்கு, வட்டி விகிதம் 35 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 7.85 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட இந்த வட்டி விகிதங்கள் அக்டோபர் 11, 2026 முதல் அமலுக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வரை வட்டியைப் பெறலாம்.

summary

Shriram Finance Limited said it has raised fixed deposit rates up to 40 basis points.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.