எஃப்.ஐ.ஐ முதலீடுகளால், 6வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!
சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 77,984.38 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்து 23,658.35 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: அந்நிய நிதி வரத்தும், உள்ளநாட்டில் முதலீட்டாளர்கள் வங்கி, எண்ணெய் & எரிவாயு பங்குகளை வாங்கி குவித்ததால், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,201.72 புள்ளிகள் உயர்ந்து 78,107.23 புள்ளிகளாக வர்த்தகமானது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 77,984.38 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 307.95 புள்ளிகள் உயர்ந்து 23,658.35 புள்ளிகளாக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,078.87 புள்ளிகள் உயர்ந்து 6 வார உச்ச விலையான 77,984.38 புள்ளிகளில் நிலைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 6 க்குப் பிறகு, முதல் முறையாக மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் முறையே 78,000 மற்றும் 23,700 புள்ளிகளைக் கடந்து முடிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெக் மஹிந்திரா, பவர் கிரிட், பஜாஜ் பின்செர்வ், ஆக்சிஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
இருப்பினும் டைட்டன், இண்டஸ் இண்ட் வங்கி, சொமேட்டோ, மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி ஏர்டெல், நெஸ்லே மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.
வங்கி, மூலதன பொருட்கள், ஐடி, எண்ணெய் & எரிவாயு, மின்சாரம், ரியாலிட்டி, பொதுத்துறை வங்கி 1 முதல் 3 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து முடிந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரூ.7,470.36 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்த நிலையில், ஐரோப்பிய சந்தைகளும் உயர்ந்து முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் எண்ணெய் 0.07 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 72.21 அமெரிக்க டாலராக உள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி, சம்பல் பெர்டிலைசர்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆவாஸ் ஃபைனான்சியர்ஸ், நாராயண ஹிருதயாலயா, கோரமண்டல் இன்டர்நேஷனல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், அஸ்ட்ராஜெனெகா பார்மா, வெல்ஸ்பன் கார்ப், நவீன் ஃப்ளோரின், எஸ்ஆர்எஃப் உள்ளிட்ட 90 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்குகளால் உந்தப்பட்டு, உள்நாட்டு பங்குச் சந்தை உயர்ந்து முடிந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86-ஆக முடிவு!