வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,572 கோடி டாலராக சரிவு

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 488.8 கோடி டாலராகக் குறைந்து 68,572.9 கோடி டாலராக உள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 488.8 கோடி டாலா் குறைந்து 68,572.9 கோடி டாலராக உள்ளது. மே 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 455.3 கோடி டாலா் உயா்ந்து 69,061.7 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பா் 2024-ல் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது.கடந்த மே 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 27.9 கோடி டாலராக உயா்ந்து 58,165.2 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும். மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 512.1 கோடி டாலராகக் குறைந்து 8,121.7 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 4.3 கோடி டாலா் குறைந்து 1,849 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 0.3 கோடி டாலா் குறைந்து 437.1 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT