FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

எஃப்எம்சிஜி, ஆட்டோ பங்குகள் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

சென்செக்ஸ் 239.31 புள்ளிகள் சரிந்து 81,312.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 73.75 புள்ளிகள் சரிந்து 24,752.45 புள்ளிகளில் நிலைபெற்றது.

Updated On : 28 மே 2025, 5:38 pm IST
Sensex
பகிர்:

மும்பை: பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனமான பிஏடி பிஎல்சி, தனது உரிமையை கூட்டு நிறுவனத்தில் குறைத்ததையடுத்து, சென்செக்ஸ் 239 புள்ளிகள் சரிந்தது. இதற்கு எஃப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி காரணமாக அமைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 307.61 புள்ளிகள் அதாவது 0.37 சதவிகிதம் குறைந்து 81,244.02 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 239.31 புள்ளிகள் சரிந்து 81,312.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 73.75 புள்ளிகள் சரிந்து 24,752.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் பங்குகளில், பிஏடி பிஎல்சி ஒரு பிளாக் டீல் மூலம் ரூ.12,927 கோடிக்கு அதாவது 2.5 சதவிகித பங்குகளை விற்று கூட்டு நிறுவனத்தில் தனது உரிமையை குறைத்ததையடுத்து, ஐடிசி நிறுவன பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தன.

Advertisement

Advertisement

இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே, அல்ட்ராடெக் சிமென்ட், மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட், ஆசிய பெயிண்ட்ஸ், சன் பார்மா மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவையும் சரிந்தும் பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் எச்.சி.எல் டெக் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

துறை சார்ந்த குறியீடுகளில், நிஃப்டி எஃப்எம்சிஜி 1.5 சதவிகிதம் சரிவுடன் முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து நிஃப்டி ஆட்டோ 0.7 சதவிகிதம் சரிந்தது.

நிஃப்டி மெட்டல் மற்றும் நிஃப்டி பார்மா தலா 0.6 சதவிகிதம் சரிந்த நிலையில், நிஃப்டி நுகர்வோர் நீடித்து உழைக்கும் பொருட்கள் 0.5 சதவிகிதம் சரிந்தன. மறுபுறம் நிஃப்டி பொது துறை வங்கி மற்றும் மீடியா ஆகியவை தலா 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி உயர்ந்த நிலையில் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் சரிவுடன் முடிந்தன.

ஐரோப்ப சந்தைகள் சரிவுடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெகுவாக உயர்ந்தன. நாஸ்டாக் காம்போசிட் குறியீடு 2.47 சதவிகிதமும், எஸ்&பி - 500 குறியீடு 2.05 சதவிகிதம் மற்றும் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1.78 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தன.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.348.45 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.69 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 64.57 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: ஜே.கே. லட்சுமி சிமென்ட் 4-வது காலாண்டு லாபம் 19% அதிகரிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments