200 டிகிரி கோணத்தில் படம் பார்க்கலாம்! ஸெப்ரானிக்ஸின் புதிய புரொஜெக்டர்!
ஸெப்ரானிக்ஸ் நிறுவனம் பிக்ஸாபிளே 63 என்ற புதிய புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
ஸெப்ரானிக்ஸ் நிறுவனம் பிக்ஸாபிளே 63 என்ற புதிய புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.
200 டிகிரி கோணம் வரை சாய்த்து திரை அனுபவத்தைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புரொஜெக்டர், 381 செ.மீ. வரை திரையை விரிவாக்கம் செய்யும் திறன் கொண்டது.
இதனால், வீட்டிலேயே தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் அனுபவத்தை இந்த புரொஜெக்டர் வழங்கும் என ஸெப்ரானிக்ஸ் நம்பிக்கை அளிக்கிறது.
Advertisement
Advertisement
குவாட் கோர் புராசஸர் கொண்ட இந்த புரொஜெக்டர், 5000 லூமென்ஸ் பிரகாசம் கொண்டது. 30 ஆயிரம் மணி நேரம் பிரகாசிக்கும் வகையிலான எல்.இ.டி.,யைக் கொண்டுள்ளது.
யூஎஸ்பி, எச்.டி.எம்.ஐ., புளூடூத் வாயிலாக இணைப்புகளைக் கொடுக்கலாம். ஸ்மார்ட்போனில் இருந்தவாரு ஸ்கிரீன் மிரரிங் மூலம் திரை அனுபவத்தைப் பெறலாம்.
ஒலி அளவைக் கட்டுப்படுத்த தனியாக ரிமோட் வழங்கப்பட்டுள்ளது. இதனால், இருந்த இடத்திலிருந்தே புரொஜெக்டர் பயன்பாட்டில் மாற்றங்களை செய்துகொள்ளலாம்.
புரொஜெக்டரில் செயலிகளுக்கான நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளதால், ஓடிடி செயலிகளை தரவிறக்கம் செய்து அதன் மூலம் படங்களைப் பார்க்கலாம். அமேசான் இணைய விற்பனை தளத்தில் இதன் விலை ரூ. 8,299.
இதையும் படிக்க | புதிய காட்சி அனுபவம்! மோட்டோரோலாவில் மினி எல்.இ.டி., டிவி!
zebronics pixaplay 63 Smart LED Projector
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.