உலகளாவிய மொபைல் சேவையில் இரண்டாம் இடம் பிடித்த ஏர்டெல்!
உலகளாவிய மொபைல் சேவையில் ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடம் பிடித்தது குறித்து...
உலகளாவிய மொபைல் சேவையில் 65 கோடி சந்தாதாரர்களுடன் ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
மொபைல் தகவல்களுக்கான உலகளாவிய அமைப்பாக செயல்படும் ஜிஎஸ்எம்ஏ - வின் தரவுகளை மேற்கோள் காட்டி, பார்தி ஏர்டெல் நிறுவனம் 65 கோடி சந்தாதாரர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், அதன் செயல்பாடுகள் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் பரவியுள்ளன என்றும் அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
“ஒவ்வொரு வாடிக்கையாளரின் தொடர்பு மற்றும் நம்பிக்கையைப் பெறுவதற்கும் மதிப்புமிக்க இணைப்பை வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் வகையில், புதுமை, நம்பகத்தன்மை மற்றும் அனுபவத்தின் தரத்தை உயர்த்த நாங்கள் பாடுபடுவோம்" என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் கோபால் விட்டல் கூறினார்.
நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்தத் தரவுகள் அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ள தகவலின் அடிப்படையில் பெறப்பட்டது” எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் 36.8 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும், ஆப்பிரிக்காவில் உள்ள 14 நாடுகளில் 17.9 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டிருப்பதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா மொபைல் என்ற நிறுவனம் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டு உலகளவில் மொபைல் சேவையில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
Airtel has secured the second position in global mobile services with 650 million subscribers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.